Breaking News

வெள்ளத்தில் மிதக்கும் ஆவுஸ்திரேலியா !!!

பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஆவுஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியதால் ஆவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை பெய்கிறது. இதுவரை 400 மிமி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தெற்கு குயின்ஸ்லாந்து பகுதி முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  வாகன போக்குவரத்து, மின்சாரம் என்பன துண்டிக்கப்பட்டுள்ளது. தொடரும் மழையினால் நிலைமை மோசமாகி வருகிறது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளத்துடன் 2 ஆயிரம் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.