Breaking News

இன்றைய ராசிபலன்-30.03.17

மேஷம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களை தாழ்த்தி பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள். 


ரிஷபம்

திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மிதுனம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். 


கடகம்

உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.


சிம்மம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்து ழைப்பார்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.


கன்னி

சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறு வீர்கள். குடும்பத்தில் உள்ள வர்கள் யாரும் தன்னைப் புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.


துலாம்

மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். நன்மை கிட்டும் நாள். 


விருச்சிகம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


தனுசு

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-
பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். நினைத்தது நிறைவேறும் நாள். 


மகரம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


கும்பம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.


மீனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.