Breaking News

மட்டக்களப்பு மாவட்ட மாதர் அபிவிருத்தி சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான நேர்காணல்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்   உள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்றைய தினம் கேட்டறிந்து கொண்டார்,

இதன் போது  ஆரையம்பதி,காத்தான்குடி,மட்டக்களப்பு,ஏறாவூர்,ஓட்டமாவடி வாழைச்சேனை மற்றும் கிரான் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் கீழுள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்களை சந்தித்ததுடன் அவர்களின் பிரச்சினைகளை அவர்களிடமே கேட்டு ஆராய்ந்து கொண்டார்.

இதன் போது   குறித்த பகுதிகளிலுள்ள பெண்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார பிரச்சினைகள் ,சமூக ரீதியான பிரச்சினைகள் தொடர்பிலும் முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்டதுடன் சிலவற்றுக்கான தீர்வினை முதலமைச்சர் உடனடியாக வழங்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்,

அத்துடன்  பெண்களின் வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கும் முதலைமைச்சின் கீழுள்ள கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் தையல் பயிற்சி நிலையங்கள் மற்றும் கைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் இதன் போது இங்கு பார்வையிட்டார்,

மாதர் அபிவிருத்தி சங்ககள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வினை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இதன் போது முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண மாதர் அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் யூ கவிதாவும் கலந்து கொண்டார்.