Breaking News

உயிர்வாயு தொழில் நுட்பத்தின் மேம்படுத்தலும் பெண்களின் பங்கேற்பும் தற்போது உணரப்பட்டுள்ள காலநிலை

உயிர்வாயு தொழில் நுட்பத்தின் மேம்படுத்தலும் பெண்களின் பங்கேற்பும்
தற்போது  உணரப்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் வளபற்றாகுறை காரணமாக மிள் உருவாக்கல் சக்தி என்பது உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்ற ஓரு விடயமாகும்.

2050 ஆண்டு உலகசனத் தொகையானது 9.7 மில்லியனாக அதிகரிக்கப்படும் என  எதிர்பார்க்கபடுகின்றது, இது மனிதனுடைய வாழ்கை முறையோடு இயற்கை எண்ணெய் வளத்தினை ஒப்பிட்டு பார்கின்ற போது பாரிய பற்றாகுறை ஏற்படு வதற்கு காரணமாக அமையும் அது மாத்திரம் அன்றி இவ் சக்தி மூலங்களின் பாவனையின் அதிகரிப்பு காரணமாக சூழல் மாசடைதல், முக்கியமாக வளிமன்டலம் மாசடையும் வீகிதம் என்பன அதிகரித்து போகின்ற நிலமை காணப்படுகின்றது.

எமது அன்றாட செயற்பாடுகளில் மின் சக்தி, எரிசக்தி என்பது எமது நேரத்தை மீதப்படுத்திக்கொள்வதற்கும் அன்றாட செயற்பாடுகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பதற்கும், எமது சமூகதரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கும் பங்களிப்பு செய்கின்றது என்பதை மறுக்க முடியாது.

இதிலும் பெண்களின் அன்றாட செயற்பாடுகளில் மின் சக்தி மற்றும் எரிசக்தி என்பது இன்றியமையாத தேவையாககருதப்படுகின்ற இச்சந்தர்பத்தில், எதிர்காலத்தில் எதிர்பார்க்க படுகின்ற நிலக்கீழ்சக்திவளத்தின் பற்றாகுறை என்பது பெண்களின் அன்றாட நடவடிக்கைகளில் பாரியதாக்கதினை செலுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.

இச் சவால் ஆனாது நிலமைகளுக்கு ஏற்பவேறுபடலாம், இருப்பினும் குறிப்பிடப்பட்ட சக்தி மூலம் இல்லை அல்லது பற்றாகுறை நிலவுகின்ற சந்தர்பத்தில் பெண்களுடைய ஆரோக்கியம், பொருளாதாரம் என்பவற்றில் பாதிப்பை கொண்டுவரும்.

இன்றய சமூக, பொருளாதார, காலாச்சார அபிவருத்தி என்பது பெண்களின் பங்களிப்பு இன்றி இல்லை.எனவே பெண்கள் சம காலத்தில் உலகம் எதிர் நோக்குகின்ற சாவல்களான இயற்கை சக்தி மூலங்களின் பற்றாகுறை, உணவு, சூழல் சார்பான புரிதலை கொண்டிருப்பதுடன்; மாற்று சக்தி வழி முறைக்கான தெளிவை பெற்றிருத்தல் என்பதும் சால சிறந்த விடயமாகும்.

இன்று எமது சக்தி பயன் பாட்டுக்கு தேவையான சக்தியானது மீள்உற்பத்தி செய்ய முடியாத  உற்பத்திகளில் தங்கியுள்ளது.

உதாரணம் மசகு எண்னெய் ,நிலக்கரி, இதனுடைய பற்றாக்குரை என்பதும் இதன் பாவனையால் ஏற்படுகின்ற சூழல் மாசடைதல், அதிக செலவு, கழிவுகளின் அதிகரிப்பு, போன்றவை இன்னும் நெருக்கடிகளை சொல்லிக்கொண்டே  போகலாம்.வீட்டில் பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் முக்கிய கரிசனை உள்ளவாராக அக் குடும்பத்தில் உள்ள பெண்னே காணப்படுவார்,  இன்று இரசாயன உரத்தின் பாவனையால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான தலைமுறை என்பது கேள்வி குறியாகவே அமைந்துள்ளது.

இதற்கு தீர்வுகாணக் கூடிய ஓன்றாக உயிரியல் வாயு தொழிநுட்பமான   மீள் உருவாக்கள் சக்தியாக கிடைக்கப்பெற்றுள்ளது,  இவ் உயிர்வாயு தொழிநுட்பம் என்பது இயற்கைக்கு எந்த தீங்கும் இல்லாத எரிவாயு, பயிரச் செய்கைக்கு தேவையான இயற்கை திரவ உரம் மற்றும் கழிவு முகாமைத்துவம் என்பவற்றிற்கு ஈடு கொடுக்க கூடிய ஓன்றாக உள்ளது, வீட்டில் உள்ள  மற்றும் வேளைக்கு செல்கின்ற பெண்களுக்கு சவாலாக அமையப் பெறுகின்ற நேரம் மற்றும் கழிவு முகமைத்துவத்திற்கு சிறந்த பதிலாகவும் உள்ளது.
மாத்திரம் அன்றி மிகவும் இலகுவாக பெண்கள் கையாளக் கூடிய இலகு தன்மையயை கொண்டது,  இவ் உயிர் வாயு  தொட்டியின் வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பது  மிகவும் சிக்கனமான ஓன்றாக காணப்படுவதுடன் பெண்களுக்கு இதனை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு சிறமமானதாகவும் காணப்படாது.

இவ் எரிவாயுவில் பயன்படுத்தக் கூடிய அதிநவின  உபகரணங்களும் சந்தையில் கிடைக்க கூடியதாகவும் உள்ளது.

உயிர் வாயு தொட்டியுனுடைய தொழில் பாடானது இயற்கையான காற்றில்லாத இடத்தில் வாழக்கூடிய நுண்னங்கிகளின் செயற்பாடுகளில் தங்கியிருப்பதால், காற்று உற்புகாத வகையில் செரிமான தொட்டி அமைத்து கொள்வதுமட்டும் முக்கியவிடயமாகும்,   இத் தொட்டிக்கு உள்ளீடாக அன்றாட கிடைக்ககூடிய உக்கலடையக் கூடிய கழிவு மனித மற்றும் மிருக கழிவுகள்,  வீட்டுக் கழிவுகள் ,தோட்டத்தில் கிடைக்க கூடிய கழிவுகள் என்பவற்றை பயன்படுத்தி சமையலுக்கு தேவையான எரி வாயு, வீட்டுக்கு தேவையான வெளிச்சம் என்பவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

இதன் பயன்பாடு தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டு பெண்களால் மட்டும் அன்றி குடும்பத்தில் அனைவராலும் உணரப்பட்டுள்ளது

ஐரோப்பிய ஓன்றியத்தின் நிதி உதவியுடன்   ஜனதாக்ஸன் (மக்களுக்கான தொழிநுட்பம்) நிருவனத்தினுடைய வழிகாட்டலுக்கு அமைவாக இவ் உயிர் வாயு தொழிநுட்பத்தினை பயன்ப்படுத்துகின்ற சில பெண்களின் அனுபவங்களை கீழ் வருமாறு பதிவு செய்துள்ளனர்.

பெண்களை பொருத்தமட்டில் உயிரியல் வாயு தொழிநுட்பம் என்பதுமிகவும் சினேகபூர்வாமான ஓன்றாக காணப்படுவதாக கிரானை சேர்ந்த திருமதி சன்முகநாதன் யோகா அம்பிகையுடன்  மேற்கொண்ட நேர்கானலின் போது அவர் தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்   எரிவாயு பாவிப்பதற்கு தனக்கு சரியான பயம் என்பதுடன் துப்பரவான எரி வாயுவாகவும் இலகுவாக சமைக்க கூடியதாக உள்ளது என தெரிவிக்கின்ற இவர் ,கிரான் பகுதியை சேர்ந்த சேதன பயிர்செய்கையில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கு இவ் உயிர் வாயு தொட்டியில் கிடைக்க பெறுகின்ற திரவ பசளையை கொடுப்பதன் மூலம் இயற்கை முறையிலான பயிற் செய்கையை மேற்க்கொண்டு, நல்ல வருமானத்தை ஈட்ட கூடியதாகவும் உள்ளது எனவும் கூறுகின்றார்.

அதேபோல் செங்கலடியை சேர்ந்த திருமதி சசிக்குமார்சலுஜா தேவி அவர்கள் எரிவாயுவுக்கு பதிலாக இவ் எரிவாயு மிகவும் சிக்கனமான ஓன்றாக இருப்பதாக கூறுகின்றார், மாதம் ஒன்றுக்கு வாங்குகின்ற  சிலின்டர் வாங்கும் செலவு தற்போது  குறைந்துள்ளது, என்னால் இத் தொகையை சேமிக்க கூடியதாக உள்ளது எனவும் கூறுகின்றார்.

செங்கலடி காயன் குடாவை சேர்ந்த சந்திரவதனி காட்டிற்கு விரகிற்கு செல்லும் ஆபத்து நிலமை குறைந்துள்ளதாகவும் காட்டிற்கு விரகிற்காக செல்லுகின்ற நேரத்தினை கைப்பணி பொருடக்ள் செய்வதன் மூலம் சிறிய வருமானத்தை பெறக் கூடியதாகவும் உள்ளது என தனது அனுபவத்தை பதிவு செய்தார்.

இவர்களை போன்ற எத்தனையோ பெண்கள் தமக்கு தெரியாமலே இன்றய உலகு எதிர் நோக்குகின்ற சக்தி, உணவு, சூழல் ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் நீடித்து நிலைத்துநிற்க கூடிய  செயற்திட்டங்களில் பங்கேற்பு செய்கின்றனர்.
அத்துடன் அன்னிய செலாவினையை குறைப்பதிலும், ஆரோக்கியமான எதிர்க்கால  சந்ததியை நிருவுவதற்கும்  உதவுகின்றார்கள் என்பது பாரட்டதக்க விடயமாகும்.

சக்தி வளத்தினை விற்பனை செய்வோர் பாரியகம் பனிகளாயினும் அதிகமாக பெண்களே இறுதி நுகர்வினை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர்.

 பெண்கள் இத் துரையில் தெளிவுப்படுத்தப்படும் பட்சத்தில் நிச்சயமாக காலநிலை மாற்றத்தை குறைத்தல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்க கூடிய அபிவிருத்தியிலும் சரி, சுழற்சி பொருளாதாரத்திலும் சரி; சவால்களை முறியடிக்கும் இன்றய முன்னெடுப்புக்களில் பாரிய பங்களிப்பை செய்யலாம்

எனவே பெண்களை ஒன்றிணைக்கின்ற வகையில் உயிர்வாயு தொழிநுட்பத்தின் மேம்படுத்தல் செயல்பாடுகள் அமையவேண்டும் என்பதுடன் பெண்கள் இவ்வாறான துரைகளிலும் தமது அக்கரையை செலுத்தி சார்பான அறிவை வளர்த்து கொள்ளவேண்டும். (லியோன் )