எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
பாலிவுட் நடிகை ஜரின் கான் தான் குண்டாக இருக்கையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தான் குண்டாக இருந்ததை நினைத்து வெட்கப்படவில்லை என்று பெருமையாக தெரிவித்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். சல்மான் கானின் வீர் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் ஜரீன் கான். மும்பையை சேர்ந்த அவர் நடிக்க வரும் முன்பு குண்டாக இருந்துள்ளார். நடிக்கும் ஆசை ஏற்பட்டதும் ஜிம்மிற்கு சென்று மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்துவிட்டார். ஜரீன் கான் பார்க்க நடிகை கத்ரீனா கைஃப் போன்று உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.