வேலை திருப்தி இல்லாததால் சீன உணவகங்களில் 10 ரோபோக்கள் பணி நீக்கம்
சீனாவில் பல ஓட்டல்களில் ரோபோக்கள் வேலையாட்களாக உள்ள நிலையில், அதன் பணிகள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காததால் ஓட்டல் உரிமையாளர்கள் பணிநீக்கம் செய்தனர்.
தற்போது அனைத்து துறைகளிலும் ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதன் ஆதிக்கம் பெருமளவில் உள்ளது.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் ‘ரோபோ’க்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சீனாவில் பல ஓட்டல்களில் ‘ரோபோ’க்கள் சமையல் கலைஞர்களாகவும், உணவு பொருட்களை சப்ளை செய்யும் பணியாட்களாகவும் உள்ளன. இந்த நிலையில் சீனாவி’ல் புஜியான் மாகாணத்தில் உள்ள 2 ஓட்டல்களில் பணிபுரிந்து வந்த 10 ‘ரோபோ’க்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டன.
‘ரோபோ’க்கள் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி அவற்றை ஓட்டல் உரிமையாளர்கள் பணிநீக்கம் செய்தனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக ஒரு ஓட்டல் திறக்கப்பட்டது. முழுவதும் ‘ரோபோ’க்களே பணிபுரியும் ஓட்டல் என விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அங்கு பணிபரியும் ரோபோக்கள் தயாரித்த உணவு பொருட்கள் ருசியாக இல்லை. சப்ளையும் சரியில்லை எனக்கூறி வாடிக்கையாளர்களின் வருகை முற்றிலும் நின்று விட்டது. அடிக்கடி ரோபோக்கள் ரிப்போர் அதிக மின்சார செலவு மற்றும் அதிக சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் கூடுதல் செலவு ஏற்பட்டது. எனவே அந்த ஓட்டல் தற்போது மூடப்பட்டது.