Breaking News

மாநகர சபையினால் முதல் முறையாக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையினால் முதல் முறையாக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின மட்டக்களப்பில் மிக சிறப்பாக  நடைபெற்றது .

106 வது சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மாறிவரும் உலகில் வேலை செய்யும் பெண்கள் – 2030  இல் 50-50  எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வி .தவராஜா தலைமையில் (08) புதன்கிழமை மாலை நடைபெற்றது    .

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில்  இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதி ஊடாக மாநகர சபை மண்டபம் வரை நடைபெற்றது .

இதனை தொடர்ந்து நகர மண்டபத்தில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றது . மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் அதனை தொடர்ந்து மாநகர சபையில் சேவை செய்து ஒய்வு பெற்ற மகளிர் உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி மற்றும் மாநகர சபை பிரதம கணக்காளர்  எ எஸ் . ஜோன்பிள்ளை ,பொறியியலாளர் டி . தேவதீபன் ,  மாநகர சபை வைத்தியர்  திருமதி . பி .பார்த்தீபன் ,  மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். (லியோன்)