Breaking News

ஏறாவூர் பற்று பிரதேச செயலக சர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வு

சர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் (08) புதன்கிழமை நடைபெற்றது 

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்  பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட் கண்காட்சியும் விற்பனையும் அதனுடன் இணைந்ததாக மகளிர் தின நிகழ்வும் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. முகுந்தன் தலைமையில் நடைபெற்றது .  

இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட  மட்டக்களப்பு மாவட்ட செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அ . சந்திரசேகரம்  நாடா வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .

இந்நிகழ்வில்  ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டது,

இதன்போது தொழில் முயற்சியாளர்களில் தெரிவு செய்யப்பட சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் , பொதுஅமைப்புக்களின் அங்கத்தவர்கள் , மாணவர்கள், பொதுமக்கள்  என பலர் கலந்துகொண்டனர் . (லியோன்)