Breaking News

காத்தான்குடியிலும் டெங்குக் காய்ச்சல் !!! 9 வயது சிறுமி மரணம் !!!

நேற்று (17) 9 வதேயான சிறுமியொருவர் டெங்குக் காய்ச்சலினால் உரிழந்துள்ளார். காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த ஜி. பாத்திமா ஹதீஜா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமிக்கு கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட காய்ச்சலைத்தொடர்ந்து,

இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குறித்த சிறுமி, வியாழக்கிழமை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.