Breaking News

மூளையுடன் கணணியை புகுத்தும் திட்டம் !!!

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்குகிறார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூராலின்க் உருவாக்கும் சாதனங்கள் மனிதர்களை மென்பொருள்களுடன் இணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும். மேலும் இவற்றை கொண்டு மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர்
சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியும்.

இது குறித்து சமீபத்தில் ட்விட்டர் மூலம் பதில் அளித்த எலான் மஸ்க், நியூரா லேஸ் எனும் வழிமுறை சார்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள முடியும். தற்சமயம் மருத்துவ முறைகளில் எலக்டிரோடு அரே மற்றும் இம்ப்லான்ட்கள் மூலம் பல்வேறு நோய்கள் சரி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் இவை உலகம் முழுக்க சிலருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை மிகவும் அபாயகரமானது என்பதால் இதன் பயன்பாடு அளவு மிகவும் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் உருவாக்கும் நியூரோலின்க் நிறுவனத்தின் திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்நிறுவனம் மனிதர்களை கணினிக்களுடன் இணைந்து செயல்பட வைக்கும் வழிமுறைகளை எளிமையாக்கி, அவற்றில் இருக்கும் அபாயத்தை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.