Breaking News

இன்றைய ராசிபலன்-17.03.26

மேஷம்

மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். இரவு 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.


ரிஷபம்

குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


மிதுனம்

குடும்பத்தின் அடிப் படை வசதிகள் பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.


கடகம்

நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத் தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


சிம்மம்

பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.


கன்னி

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


துலாம்

இரவு 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்கள் விவகாரங் களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


விருச்சிகம்

குடும்பத்தின ருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத் தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் கவனம் தேவைப்படும் நாள்.


தனுசு

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகன வசதிப் பெருகும். சொந்த-பந்தங்கள் தேடி வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.


மகரம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத் தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


கும்பம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.


மீனம்

இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித் துப் போங்கள். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய நாள்.