Breaking News

இன்றைய ராசிபலன்-06.03.17

மேஷம்

சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.


ரிஷபம்

காலை மணி 9.45 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சோர்வு வந்து போகும். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சி கள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


மிதுனம்

காலை மணி 9.45 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலை களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்தி கள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


கடகம்

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.  



சிம்மம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பெற்றோ ரின் ஆதரவு பெருகும். உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிறப்பான நாள்.


கன்னி

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத் தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


துலாம்

காலை மணி 9.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் மனப்போர் வந்து நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள். 


விருச்சிகம்

காலை மணி 9.45 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


தனுசு

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர் களால் பயனடைவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


மகரம்

எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பயணங்கள் திருப்தி கரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள். 


கும்பம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர் கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


மீனம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.