Breaking News

இன்றைய ராசிபலன்-10.03.17

மேஷம்

மேஷம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். வீடு, வாகனப் பரா மரிப்புச் செலவுகள் அதிகரிக் கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.


மிதுனம்

மிதுனம்:  இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


கடகம்

கடகம்: மாலை 5.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலையை மாறு பட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


சிம்மம்

சிம்மம்: எதிர்பார்ப்புகள் தாமதமாகும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 5.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


கன்னி

கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


துலாம்

துலாம்: உங்கள் செய லில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதித்துக் காட்டும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங் கள் அறிமுகமாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


தனுசு

தனுசு: மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


மகரம்

மகரம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங் கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5.15 மணி
முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் தேவைப்படும் நாள்.


கும்பம்

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.


மீனம்

மீனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.