Breaking News

16 வயது மாணவன் கொலை தொடர்பில் 3 பொலிசாருக்கு சிறை

16 வயது மாணவன் கொலை தொடர்பில் 3 பொலிசாருக்கு சிறை

1991ஆம் ஆண்டு 16 வயது மாணவன் ஒருவனை கொலை செய்தனர் என்று குற்றச்சாட்டப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட பொலிஸார் மூவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இஸட் ரசீம், 8 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் தலா 25ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளார். இங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் அதிகாரியான ரொஷான் டி சில்வா மற்றும் கான்ஸ்டபள்களான முதியன்சலாகே ஜயசேன மற்றும் சிங்கள விருதலாகனே தீப்தி சாந்த ஆகிய இருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.