அமளி துமளிக்கு பின்னர் விமலவீர திஸாநாயக்க...
பெரும் அமளிதுமளிக்கு பின்னர் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க. நேற்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு, சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நேற்றுக்காலை 9.30க்கு கூடியது. இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்;பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.சுபைர், விமலவீர திஸாநாயக்க ஆகியோர், எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கமாறு கோரி; கடும் ஆரவாரம் செய்தனர். இதனால், அவையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. அவையை தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதால் அவையை ஒரு மணிநேரத்துக்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார். சபை அமர்வு மீண்டும் 1.30க்கு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுபேரின் ஆதரவுடன் விமலவீர திஸாநாயக்க கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்



