Breaking News

20ஆவது திருத்தத்திற்கு அங்கீகரத்தைப் பெறுவது சாத்தியமல்லை – பொதுத்தேர்தல் அவசியம் ஐ.தே.க ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரிக்கை t

20ஆவது திருத்தத்திற்கு அங்கீகரத்தைப் பெறுவது சாத்தியமல்லை – பொதுத்தேர்தல் அவசியம்
ஐ.தே.க ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரிக்கை 

பாராளுமன்றத்தை மிக விரைவில் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் எழுத்து மூலம் கோருவதாக வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா இன்று (15) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நூறு நாள் ஆட்சிக்காக மக்கள் ஆணையைப் பெற்றுவிட்டு அதனை இரு நூறு நாட்கள் வரை நீடிப்பது மக்கள் ஆணையை மீறுகின்ற செயலாகும். இதன் காரணமாக மக்கள் நம்பிக்கையினை இழக்கும் நிலை உருவாகுவதாகவும் தற்போது நிலவுகின்ற அரசியல் நிலைமைக்கு அமைவாக புதிய தேர்தல் முறையினை ஏற்படுத்துகின்ற 20ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலை காணப்படவில்லை எனவும் வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் நாட்டிற்காக அரசியல் ரீதியாக சிந்தித்து எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியும் நிச்சயமாக மகிழ்ச்சியடைவார் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை நடாத்தி அரசாங்கத்தை அமைத்த பின்னர் புதிய தேர்தல் முறையினை ஏற்படுத்துகின்ற 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நமது நிருபர்