Breaking News

சரத் பொன்சேக்காவின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி


வறிதக்கப்பட்ட தனது பாராளுமன்ற ஆசனைத்தை மீளப்பெற்றுத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயநாத் கெடகொடவின் நியமனத்தை இரத்துச் செய்யுமாறும் கோரி ஜனநாயகக் கட்சித் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்காவினால் முன்வைக்கப்பட்ட மனு திங்கட்கிழடையன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.



மேற்படி மனுவில் தனது பாராளுமன்ற ஆசனைத்தை மீளப்பெறுவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயநாத் கெடகொடவின் நியமனத்தை இரத்துச் செய்தும் உத்தரவிடுமாறு கோரியிருந்தார். தன்மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தான் விடுவிக்கப்பட்டுள்ளதால் தான் மீள நியமிக்கப்படுவதற்கு தகுதியுடன் இருப்பதாக மனுதாரரினால் குறிப்பிடப்பட்டிருந்தது.


நமது நிருபர்