Breaking News

மட்டக்களப்பு மாநகர சபையில் புனித அந்தேனியார் பெருவிழா

2015ஆம் ஆண்டிற்கான புனித அந்தேனியார் பெருவிழா இன்று (16) காலை 10.30 மணியளவில் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது. அருட்பணி XI.றஜீவன் அவர்களினால் விசேட ஆராதனையும் நிகழ்த்தப்பட்டது. 



மேற்படி புனித அந்தேனியார் பெருவிழா மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்திற்கு முன்புறமாக அமைந்துள்ள புனித அந்தேனியாரின் சுரூபத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதி ஆணையாளர் தனஞ்சயன், கணக்காளர் ஜோன் பிள்ளை உட்பட சமய வேறுபாடுகளின்றி பெருந்திரளான மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்