சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண நூலகர்களுக்கான தாபனவிதிக் கோவை, நிதி முகாமை மற்றும் நுலகவியல் தொடர்பான மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நெறி மட்டக்களப்பு சர்வோதய பிராந்திய மத்திய நிலையத்தில் 03ஆம், 04ஆம், 05ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இந்த பயிற்சி நெறியின் வளவாளர்களாக தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் திருமதி.மஸ்ரூபா, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக கணக்காளர் உதயராஜன் மற்றும் பட்டிப்பளை உதவிப் பிரதேச செயலாளர் நவேஸ்வரன் ஆகியோர் வருகைதந்தனர்.
பயிற்சி நெறியின் முடிவில் பங்குபற்றிய அனைவருக்கும் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் திருமதி. கவிதா உதயகுமாரினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நெறி பயிற்சி உத்தியோகத்தர் சிறிதரனினால் நெறிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது



