Breaking News

பாலர் பாடசாலைகளும் வணக்கஸ்தலங்களும் இரு கண்களைப் போன்றவை – ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்

பாலர் பாடசாலைகளும் வணக்கஸ்தலங்களும் இரு கண்களைப் போன்றவை – ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் 

நமது நிருபர்

பாலர் பாடசாலைகளும் வணக்கஸ்தலங்களும் இரு கண்களைப் போன்றவை சிறுவர்களிள் ஆளுமை விருத்திக்கு பாலர் பாடசாலைகளே அடிப்படையாகக் காணப்படுகின்றன அத்துடன் ஆன்மீக வழிப்படுத்தலை வழங்குகின்ற மையமாக பள்ளிவாயல்கள் காணப்படுகின்றன என ஓய்வு பெற்ற பாலர் பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் இலங்கை திறந்த பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளருமான திருமதி. ஆர். சீனிவாசன் தெரிவித்தார். 

காத்தான்குடி அமானா பாலர் பாடசாலையின் 2015ஆம் ஆண்டிக்கான பாலர் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். காத்தான்குடி அமானா பாலர் பாடசாலையின் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ஐ.எம்.அன்வர் ஆசிரியர் தலைமையில் இடம் பெற்ற இவ் விளையாட்டு விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஒரு பாலர் பாடசாலையில் விளையாட்டு நிகழ்வொன்றில் மாணவர்களால் திறமை வெளிப்படுத்தப்படுமானால் அதன் பின்னணியில் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

அமானா பாலர் பாடசாலையின் மாணவர்களால் செய்து காட்டப்பட்ட உடற்பயிற்சிக் கண்காட்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அதனை பயிற்றுவித்த ஆசிரியைகளை நாம் பாராட்ட வேண்டும். 
வீடு என்பது மற்றுமொரு மிகச் சிறந்த கல்விக்கூடமாகும். மாணவர்களை புடம்போடுவதில் வீட்டுச் சூழல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். 

காத்தான்குடி அமானா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் அதிதிகள் என ஏராளமானோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது