விடாது காஞ்சனா - வருகிறது மூன்றாம் பாகம்
இதுதான் விதி என்பது. இயக்குனர் சரண், முனி என்ற படத்தை தயாரித்த பிறகுதான் படிப்படியாக பாதாளத்துக்கு சென்றார். அதே முனிதான் ராகவா லாரன்ஸை கரன்சி மெத்தையில் புரளச் செய்கிறது.
முனியின் இரண்டாம் பாகமாக அவர் இயக்கிய காஞ்சனா அவரே எதிர்பார்க்காத அளவுக்கு தறிகெட்டு ஓடியது. தமிழகம், ஆந்திரா என இரு மாநிலங்களில் அது ஒரு பென்ச் மார்க் படமானது. அதன் அடுத்தப் பாகமாக வெளிவந்தது காஞ்சனா 2.
காஞ்சனாவைவிட கதையிலும், திரைக்கதையிலும் மிகமோசமான படமாக இருந்தாலும் காஞ்சனாவை கண்டு பழகிய ஜனங்கள் இரண்டாம் பாகத்தையும் தேயத்தேய பார்த்தார்கள். படம் உலகம் முழுவதும் 108 கோடிகள் வசூலித்ததாக கணக்கு காட்டுகிறார்கள் (இது மீடியாவுக்கு மட்டுமானதா இல்லை இன்கம்டாக்ஸுக்குமா?)



