Breaking News

சண்டையை விரும்பாத விவேக்

காமெடி நடிகர் விவேக் ‘நான்தான் பாலா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை சந்திரமோகன் என்பவர் இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

குடும்ப பின்னணியில் நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகியிருக்கிறது. இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்து நிலவி வந்தது.

இந்நிலையில், இப்படத்தை வருகிற ஜூன் 26-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமே இப்படித்தான்’ படம் நாளை வெளியாகவுள்ளது.

இதையடுத்து அடுத்த வாரம் வடிவேலு நடிப்பில் ‘எலி’ படம் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்கள் வெளியாவதால் இப்படங்களுக்குப் பிறகு விவேக் படம் வெளியாகிறது.