Breaking News

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளன

நமது நிருபர்;

2016ஆம் ஆண்டு தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான விபரங்கள் இன்று வெளியாகியுள்ள தினகரன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

புதிய சுற்றறிக்கையின் படி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக  தரம் ஒன்றிற்கான மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரியவருகின்றது

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படிஇ அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது வகுப்பொன்றில் 35 மாணவர்களே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 2007ம் ஆண்டு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாணவர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எமது வாசகர்களின் வசதிக்காக தினகரன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள விண்ணபங்கள் கோரல் அறிவித்தல்  பதிவேற்றப்பட்டுள்ளது.