வேட்பாளர்களுக்கான நன்னடத்தை சான்றிதழ்!!!
பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பற்றவர்கள் என்பதை தேடியறிந்து கண்டுபிடித்து தருமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கைவிடுமாயின் அவை தொடர்பில் தேடியறிந்து வேட்பாளர்கள் தொடர்பில் நன்னடத்தை சான்றிதழ் வழங்க தயாராக இருப்பதாக அபாயகரமான போதைப் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வைத்தியர் திலங்க சமரசிங்க தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்கக்கூடாது என்ற யோசனையில் சகல கட்சிகளின் தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். இது முன்மாதிரியான செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



