Breaking News

நிதியமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை

நமது நிருபர் ;


நிதியமைச்சர் ரவி கருணநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையினை இவ் வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு சபாநாயகரை கோரியுள்ளதாகவும் அது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியாலாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலைத் தெரிவித்தார். 


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இதுவரை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை. அது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படுவதற்கு இன்னும் 4-5 நாட்கள் செல்லும். அது தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டதன் பின்னரே எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.