20ம் திருத்தச்சட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்
திங்கட்கிழமை(8) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூ டிய அமைச்சரவை 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக , புதிய தேர்தல் முறைமைக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரேரிக்கப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் முறைமைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய 125 உறுப்பினர்கள் விருப்பத்தெரிவு அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளதோடு 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.