எகிறியது புலி பட்ஜெட் 5 கோடி செலவில் ஓப்பனிங் சாங்.
விஜய் சினிமா பயணத்தில் மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகிவரும் வரும் படம் "புலி". புலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது ஆந்திராவிலுள்ள தலக்கோணம் பகுதியில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விஜய்யும், 100 நடனக்கலைஞர்களும் இணைந்து ஆடும் ஓபனிங் பாடல் ஒன்றிற்காக கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் செலவில் சூப்பர் செட் ஒன்றை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளாராம் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்.
இந்த செட்டில் விஜய்யின் சூப்பரான நடனத்துடன் பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறதாம். இதுவரை பார்த்திராத வகையில் இப்பாடல் வித்தியாசமான ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் ‘நட்டி’ நட்ராஜ்.



