மாற்றுப்பாலினத்தவர்கள் குறித்து திரைப்படவிழா
மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து வெளிப்படையான விவாதங்கள் எதுவும் நடப்பதில்லை. அரிதாக நடக்கும் ஒன்றிரண்டு உரையாடல்களும், கலாச்சார பிறழ்வாகவே பார்க்கப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் இது குறித்த விவாதத்தை முன்னெடுக்கும் விதமாக அமெரிக்கன் சென்டரும், சினிதர்பார் சங்கமும் இணைந்து டெல்லியில் மூன்றுநாள் சர்வதேச திரைப்படவிழாவை நடத்துகின்றன. மூன்றாம் பாலினர், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இருபால்சேர்க்கையாளர்கள் ஆகியவர்களைப் பற்றிய திரைப்படங்கள் இந்த மூன்று நாள் திரைப்பட விழாவில் திரையிடப்படும். பாய்ஸ் டோண்ட் க்ரை, ப்ரூக் பேக் மௌண்டன், லீட் வித் லவ் போன்ற யுஎஸ் படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன.
வரும் 25 -ஆம் தேதி இந்த திரைப்பட விழா தொடங்குகிறது. இதனை சுருக்கமாக எல்ஜிபிடி LGBT (lesbian, gay, bisexual and transgender) என்று அழைக்கிறார்கள்



