உலகிலேயே அதிவேக வை.ஃபை இண்டர்நெட்
உலகிலேயே மிக அதிவேகமான வை-ஃபை இண்டர்நெட் வசதியை வழங்கி தாய்லாந்து நாடு புதிய சாதனை படைத்துள்ளது.
வை-ஃபை இண்டர்நெட் வேகத்தை மதிப்பீடு செய்து வரும் பிரபல இணையதளமான ரோட்டன்வைபை.காம் ஒரு ஆய்வை நடத்தியது. உலகம் முழுவதிலும் உள்ள 130 நாடுகளின் முக்கிய விமான நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் வை-ஃபை இண்டர்நெட் வேகத்தை பற்றி ஆராய்ச்சி செய்தது. அதில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வரும் வை-ஃபை சேவை அதிக வேகத்தை பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு நொடிக்கு 41.45 எம்.பி வேகத்தில் இண்டர்நெட் சேவையை வழங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தாய்லாந்து விமான நிலையத்தில் இரண்டு மணிநேரம் இலவச இண்டர்நெட் வசதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



