மஹிந்தானந்தவிடம் விசாரணை
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்றைய தினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவுப் பொலிசாரினால் சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கரம் போட் மற்றும் டாம் போட்களை கொள்வனவு செய்ததில் 39 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.
நமது நிருபர்



