பாகிஸ்தானில் வெயிலுக்கு 260 பேர் பலியானார்கள்.
கடும் வெயில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மாகாணத்தின் பல பகுதிகளில் 110 டிகிரி முதல் 112 டிகிரி வரை பாரன்ஹீட் வெயில் கொளுத்துகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிந்து மாகாணத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக மாகாண தலைநகர் கராச்சியில் வெயில் வறுத்தெடுக்கிறது. வெயிலின் கோரத்தை தாங்க முடியாமல் கடந்த 2 நாட்களில் மட்டும் கராச்சியில் 100 பேரும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் 32 பேரும் என மொத்தம் 132 பேர் பலியாகி உள்ளனர்.



