Breaking News

கானா நாட்டில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து...

கானாவின் தலைநகரான அக்ராவிலுள்ள பெற்றோல் நிலையமொன்றில் கடந்த புதன்கிழமை  தீ பரவியதைத் தொடர்ந்து 90 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கு இரண்டு நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், இதனால் பலர் வீடுகளையும் இழந்துள்ள இவ்வேளையில்  மேற்படி பெற்றோல் நிலையத்திலும் தீ பரவியுள்ளது.
தீ பரவிய வேளையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோல் நிலையக் கூடாரத்தினுள் மக்கள் தஞ்சமடைந்த வேளையில் தீ பரவியுள்ளதாக நம்பப்படுகின்றது.   
 சடலங்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.