Breaking News

ஹொலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தில் உயிரிழப்பு !

ஹொலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தொன்றில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தென் கலிபோர்னியாவில் இடம்பெற்ற விபத்திலெயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 61 வயதான, ஜேம்ஸ் ஹோர்னர் டைட்டானிக் , பிரேவ் ஹார்ட், அவதார் , பியூடிபுல் மைந்த் உள்ளிட்ட ஹொலிவுட்டின் பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒஸ்கார் விருதினையும் ஜேம்ஸ் ஹோர்னர் வென்றுள்ளார். அவருக்கு சொந்தமான இலகு ரக விமானமே காட்டுப் பகுதியொன்றில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அவரது மரணத்துக்கு ஹொலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர். தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான அவர் 100 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளமை குறிப்பிட த்தக்கது.