ஃபிஃபா குறித்த ஊழல் அனைத்தையும் கூறுவேன்
தான் உயிரச்சத்தில் இருப்பதாக, பணம் கொடுத்து ரினிடாட்டில் உள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில், கூறிய ஜாக் வார்னர், ஆனால், இனியும் மௌனமாக இருக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஃபிஃபா அமைப்பின் தலைவர் செப் பிளட்டர் அவர்களின் கொடுக்கல் வாங்கல்கள் உட்பட, தனக்கும், ஃபிஃபா அமைப்புக்கும், அதற்கான நிதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த ஆவணங்களை தான் சட்டத்தரணிகளிடன் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஃபிஃபாவும், பிளட்டரும் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிவருகின்றனர்.
ஃபிஃபாவுக்கும், ரினிடாட்டில் 2010இல் நடந்த தேர்தலுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் தான் நிரூபிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.



