தேசத் துரேகிகளாகப்போகும் அரசியல்வாதிகள் யார் ?
அரசியல் ரீதியாக மாற்றமடைந்துள்ள காலமாக இந்தக் காலத்தினை கருதலாம். இதற்கு முக்கியமான காரணங்களாக நான்கு காரணங்களைக் கூறலாம். ஏகாதிபதித்துவ ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததனை முதலாவது விடயமாகக் குறிப்பிடலாம். சட்டத்துறை எந்தவித அரசியல் அழுத்தங்களும் இல்லாது சுதந்திரமாக செயற்பட சந்தர்ப்பம் ஏற்பட்டதனை இரண்டாவது விடயமாகக் குறிப்பிடலாம். இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளை மட்டுப்படுத்தியமை மூன்றாவது விடயமாகும். அரசியல் கலாச்சாரத்தினை சுத்தமாக்கி அரசியல்வாதியொருரை வியாபாரியாகவல்லாது மக்கள் சேவகராக மாற்றியதை நான்காவது விடமாககக் கொள்ளலாம். இதற்கான அடிப்படை அரசியல் உபாயமாக இரண்டு விடயங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்று 19ஆவது அரசியலமைப்பு திருத்தம், மற்றயது 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஆகியனவாகும்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அங்கீகரித்துக் கொள்வதற்கு ஜனாதிபதியவர்களும் அரசாங்கமும் மிகக் கடுமையாக முயன்று வெற்றி பெற முடிந்தது. 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினையும் அவ்வாறே வெற்றிபெறச் செய்ய முடியும் என நம்பலாம். ஜனாதிபதி இதற்கான சட்ட வரைவினை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்தோடு அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அடுத்து செய்யப்பட வேண்டியது சட்ட வரைவினை உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து சிபார்சினைப் பெறுவதாகும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதத்தின் பிற்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும். தற்போது நிலவுகின்ற அரசியல் பின்புலத்திற்கு அமைவாக இவ்வரசியலைப்புத் திருத்தத்தினை பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடையச் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. இவ்வரசியலைப்புத் திருத்தத்தினை எதிர்ப்போர் தேசத் துரோகிகள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தம் என்பது என்ன? இதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பிரதிபலன்கள் எவை? இந்தத் திருத்தத்தின் அடிப்படை கருத்து தற்போதுள்ள மோசமான தேர்தல் முறையினை மாற்றுவதாகும். 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் மிகப் பாரதூரமான இரண்டு தவறுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று வரையறையற்ற அதிகாரங்களுடன்கூடிய ஜனாதிபதிப் பதவி, மற்றய தவறு மிக மோசமான அரசியல்வாதிகளை உருவாக்கும் விருப்பு வாக்கு முறைமை எனக் கூறலாம். 19ஆவது அரசியல்யாப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையில் வரையறையற்ற அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. 20ஆவது அரசியல்யாப்புத் திருத்தத்தின் மூலம் விருப்பு வாக்கு முறைமை நீக்கப்பட்டு மேலும் சாதகமான அரசியல் மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் முழு சனத்தொகையில் 51 வீதமானோர் பெண்களாவர். எனினும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 வீதத்தினை விடவும் குறைவாகவே காணப்படுகின்றது. ஜனநாயக ரீதியில் பார்க்குமிடத்து இந்த நிiலைமை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றே கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இச் சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு பாரிய பொறுப்புள்ளது அதாவது, நடிகைகள், ஒப்பனை கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் போன்றோரை விடுத்து நாட்டுக்கு சேவையாற்றக் கூடிய அறிவுபூர்வமான பெண்களை மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு பொறுப்பாக இருப்பதாகும்.
புதிய தேர்தல் முறை மாற்றத்தின் விளைவாக குற்றங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பிரதான வாயில் அடைக்கப்படுகின்றது. அந்த வழியே விருப்பத் தேர்வு முறையாகும். இந்த முறையின் பிரகாரம் தேர்தலில் பெருமளவில் செலவு செய்யக் கூடிய வியாபரிகளால் மாத்திரமே வெற்றிபெற முடியும். போதைவஸ்து வியாபாரிகள், எத்தனோல் வியாபாரிகள், கெசினோகாரர்கள், கறுப்புப் பணத்தினை பயன்படுத்துவோர் மற்றும் கொலைகாரர்கள் இந்த முறைமையின் மூலம் பாராளுமன்ற அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்பது இரகசியமான விடயமல்ல. நமது கடந்த கால அரசியல் அனுபவங்கள் இதற்கு நல்ல சான்றாகக் காணப்படுகின்றது. இந்த முறைமை மாற்றப்பட வேண்டுமென மக்கள் குரலெழுப்பியது மிக நீண்டகாலத்திற்கு முன்னராகும்.
தற்போதுள்ள தேர்தல் முறையிலுள்ள மற்றுமொரு குறைபாடுதான் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக எந்த தேர்தல் தொகுதியிலுள்ள மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாமையாகும். இந்தத் நிலைமையின் கீழ் ஏதெனும் பிரதேசமொன்றிற்கு குறிப்பான உறுப்பினரொருவர் இல்லதிருப்பதாகும். முழு மாவட்டத்திலும் வாக்குகளைக் கைப்பற்றுவதற்கு செயற்படும் நபர் அல்லது வேட்பாளர் பெரும்பாலும் கண்காட்சி காட்டுவதற்கோ அல்லது வெறும் பிரச்சார செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கோ முற்படுவார். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையோடு இணைந்த தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமது பிரதேச மக்களுடன் மிக நெருக்கமானவராக இருப்பார். அதேபோன்று அவர் தனது தொகுதிக்காக உச்சபட்ச வேலைகளைச் செய்வதற்கு முற்படுவார். புதிய தேர்தல் முறை முலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை மீள செயற்படும்.
இது சம்பந்தமான வாதப் பிரதிவாதங்கள் 2003ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அன்று தேர்தல் முறையினை மாற்றுவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் அமைக்கப்பட்டது. எனினும் அரசியல் கட்சிகளின் கயிறுழுப்பின் காரணமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் இடைநடுவில் கைவிடப்பட்டன. தற்போது கூட தேர்தல்முறை மாற்றத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவுpக்கும் அதே நிலையில் உள்ளார்ந்த ரீதியில் அதனை எதிர்ப்போரும் இருக்கக் கூடும். எனினும் தற்போது ஒரு விசேடம் காணப்படுகின்றது. அதாவது பொதுமக்களும் சிவில் சமூகமும் இது தொடர்பில் காட்டுகின்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போதைய வாக்காளரை விட எதிர்கால வாக்காளர்கள் அறிவுபூர்வமானவர்களாக இருப்பார்கள் என நம்பிக்கை கொள்ள முடியும்.
அமைச்சரவை அங்கீகாரமளிக்கப்பட்ட சட்ட வரைவில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரியவருகிறது. அதிலுள்ள ஒரு குறைபாடாக அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுவது தேர்தல் தொகுதிகள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டமையாகும். இதன் மூலம் சில இனங்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடும். இதில் காணப்படும் மற்றுமொரு குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுவது சிறுபான்மையினரை பிதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இதன் மூலம் நட்டம் ஏற்;படக் கூடும் என்பதாகும். இதனை தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதிர்காலத்தில் உள்ளன. அரசியல் கட்சிகளும் குழுக்களும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தமது ஆலோசனைகளை முன்வைக்க முடியும். எவ்வாறாயினும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் புதிய அரசியல் கலாச்சரத்தை கட்டியெழுப்ப வழி பிறக்கும்.
ஜனாதிபதி குறிப்பிட்டது போன்று இந்த சட்டத்திற்கு எதிரான நபர் தேசத் துரோகியாக மாறுவதை தடுக்க முடியாது.
தினமின ஆசிரியர் தலையங்கம்
10.06.2015




