Breaking News

சுதந்திர கட்சியின் மேலும் 4 உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாக பதவியேற்பு


சனத் ஜயசூரிய, விஜிய தஹநாயக்க, எரிக் வீரவர்தன மற்றும்  திலங்க சுமதிபால ஆகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பிரதியமைச்சர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் 5 பேருக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்த மேலும் நால்வருக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.