Breaking News

டிரான் அலஸ், எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் கைதுசெய்யப்படமாட்டார்

டிரான் அலஸ், எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் கைதுசெய்யப்படமாட்டார் என்று சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். தன்னை கைதுசெய்வதற்கு தயார்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு டிரான் அலஸ் எம்.பி., அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். 
அவருடைய மனுவை பரிசீலனைக்கு எடுத்துகொள்ளவிருந்த நீதியரசர் குழு ஒன்று வியாழக்கிழமை சமூகமளிக்கவில்லை. பிரதம நீதியரசர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் குழுவின் கீழ் அந்த மனுவை பரீசீலனை செய்யும் வரையில்  நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் கைதுசெய்யப்படமாட்டார் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.