மைத்திரியை பிரதமராக்க விரும்பினேன்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க தாம் விரும்பியதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்ளுர் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்ப்பது எனது பிரார்த்தனையாக அமைந்திருந்தது. தனியார் வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வரும் நிலையில் அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை. எனினும், போட்டியிட்டால் அது சகோதரர் மஹிந்த ராஜபக்சவுடன்தான் போட்டியிடுவேன் என பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த அரசாங்கத்தில் பிரதமராவதனை தடுத்த பிரதான நபராக பசில் ராஜபக்ச மீது அரசியல் வட்டாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



