மர்ம மனிதனிலிருந்து வெளியேறிய ப்ரியா ஆனந்த்...
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு மர்ம மனிதன் என்று பெயர் வைத்துள்ளனர். பெயருக்கேற்ப படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சில மர்ம நடவடிக்கைகள். இதில் ப்ரியா ஆனந்த்தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனந்த் சங்கரின் முதல் படம் அரிமா நம்பியிலும் அவர்தான் நாயகி. இப்போது திடீரென்று அவர் வாக் அவுட் செய்துள்ளார். விக்ரம் ரசிகர்களிடம் சாரி கேட்டிருப்பவர், கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
ப்ரியா ஆனந்துக்குப் பதில் தற்போது பிந்து மாதவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
படமே இல்லாத ப்ரியா ஆனந்துக்கு கால்ஷீட் பிரச்சனையா? எங்கேயோ இடிக்குதே பாஸ்.



