நடந்துகொண்டே எஸ்.எம்.எஸ் அனுப்பியபோது காணினுள் சிக்கியது கால்
சீனாவில் தெருவில் நடந்தவாறே எஸ்.எம்.எஸ் அனுப்பியபோது பதின்மவயது யுவதியொருவரின் காலொன்று காணினுள் சிக்கியது தொடர்பில் செய்தியொன்று பதிவாகியுள்ளது.
தென்மேக்கு சீனாவின் மியான்யாங் நகரத்தில் யுவதியொருவர் வீதியில் நடந்தவாறே தனது கையடக்கத் தொலைபேசியின் தொடு திரையில் தட்டி டைப் செய்தபோது அவரது கால் வடிகானை மூடியிருந்த கம்பிச் சட்டகத்தின்மீது வைக்கப்பட அவரது வலது கால் சரேலென உள்ளே சென்றுவிட்டது.
பொதுமக்கள் விரைந்து வந்து அந்த மீட்க உதவியபோதிலும் அவரது தொடைப்பகுதி கம்பியினுள் நன்றாக இறுகிவிட்டதால், தீயணைப்புப் படையினரை அழைக்க வேண்டியேற்பட்டது.
அவசர சேவைப் பிரிவினர் வருகை தந்து கம்பிகளை அகற்றும் வரை 45 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் அந்த யுவதி சாக்கடை மூடிக் கம்பியினுள் சிக்குண்டிருந்தார். சிறிதளவான சிராய்ப்புக் காயங்களுடன் அவர் தப்பித்துக் கொண்டார்;.
நமது நிருபர்



