Breaking News

மிருசுவில் கொலை தொடர்பான தீர்ப்பு உலகிற்கு தெளிவைத்தரும் சம்பவமம் ...!

15 ஆண்டுகளுக்கு முன்னர் மிருசுவில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் வழங்கபட்டுள்ள தீர்ப்பு இலங்கை சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்டோர் தொடர்பில் உயிரோட்டமுள்ள பொறிமுறையொன்றினைக் கொண்டுள்ளதென்பதைக் காட்டுகின்றது என இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயசூரிய தெரிவித்ததாக லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ குறித்த படுகொலைச் சம்பவம் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையே உக்கிர மோதல் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றுள்ளது. முதலில் சந்தேகத்தின் பேரில் 14 படையினர் கைது செய்யப்பட்டு அநுராதபுர நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். 

பின்னர் நீதிமன்றம் ஒன்பது பேரை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்தது. 

குறித்த வழக்கு பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் ஐவருள் ஒருவர் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நமது நிருபர்