மதுபானம் விற்பனை செய்த நடத்துனர் கைது
ரத்தொட்டவிலிருந்து லக்கல வரை சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றில் பயணவேளையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டபோது அதன் நடத்துனர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நடத்துனர் மதுபான விற்பனை நிலையத்தில் மதுபானத்தை கொள்வனவு செய்து பஸ்பயணத்தின் இடைநடுவில் பாதையில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதனை விற்பனை செய்வதாக பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக லக்கல பொலீஸாரினால் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் நான்கு மதுபான போத்தல் மற்றும் 7000 ரூபாப் பணத்துடன் நடத்துநரும் சாரதியும் கைது செய்யப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.
நமது நிருபர்



