ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!
எத்கந்துர சீவலி வித்தியாலயத்தின் 14 வயது மாணவனொருவனை அதே பாடசாலையின் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக அல்பிட்டிய பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆசிரியர் இந்த மாணவனை தாக்கியுள்ளார். இதனால் முகத்தில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்ததாக அந்த மாணவனின் பெற்றோரால் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் ஏலவே சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவரெனவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நிருபர்



