Breaking News

சங்கீத ஆசிரியையிடம் சேஷ்டை செய்த ஆசிரியர் நைப்புடைக்கப்பட்டார் !!!

ஹோமாகம பிரதேசத்தின் பிரபால பாடசாலையொன்றில் சங்கீத ஆசிரியையிடம் சங்கீதம் கற்பிக்கும் அறையினுள் பாலியல் சேஷடையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் அந்தப் பாடசாலையின் ஆசிரியரொருவர் நையப்புடைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். 

சங்கீத ஆசிரியையின் கணவர் உள்ளிட்ட குழுவினரே தன்மீது தக்குதல் மேற்கொண்டதாக அவரால் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆசிரியரால் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் பாடசாலையின் ஆசிரியைகளை தொந்தரவு செய்துள்ளார் என அப்பாடசாலையின் அதிபர் பொலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இந்த ஆசிரியர் மாகம்மன பிரதேசத்ததை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்