Breaking News

அடுத்த ஆட்டத்திற்கு ரெடி; ரோஹித் சர்மா

அடுத்த ஆட்டத்திற்கு ரெடி; ரோஹித் சர்மா

அடுத்த போட்டிக்காக அதிகளவு தயார் நிலையில் உள்ளோம் என்று ரோஹித் சர்மா உறுதிபட கூறியுள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில் ‘‘வங்கதேச அணியினர் அற்புதமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர். நாங்கள் யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போதைக்கு உள்ள ஃபார்மிலேயே, சிறந்த ஆட்டத்தை அவர்களுக்கு எதிராக வெளிப்படுத்த வேண்டும். எங்களது விளையாட்டு திட்டத்தின்படி ஆடுவது முக்கியமானது.

அவர்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், இந்திய அணிக்கு இழப்பதற்கு நிறைய உள்ளது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது பிரதேசத்திற்குள் விளையாடுகையில், இந்த வழியில் அவர்கள் விளையாடுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், இதனை தவிர்க்க முடியாது.

தொழில்முறை வீரராக அவர்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். அடுத்த போட்டிக்காக அதிகளவு தயார் நிலையில் உள்ளோம் என்பதை உறுதியாக சொல்ல முடியும்’’ என்றார்.