Breaking News

பாசிக்குடா கடலில் நீராடிய இளைஞன் கடலில் மூழ்கி மரணம் !

நேற்று புதன்கிழமை மாலை பாசிக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்த எஸ்.ரீ.துஸான் துலன்ஜய என்ற 23  வயது இளைஞன்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல, கனாதென்ன பிரதேசத்திலிருந்து பஸ் வண்டியில் 33 பேர்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாசிக்குடாவுக்கும் வந்தனர். இந்த நிலையில், இவர்  பாசிக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.