Breaking News

பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சீனா பயணம் - பதில் பேச்சாளராக பிரியந்த ஜயகொட நியமனம்


பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர புதன் கிழமை (10) சீனாவின் பீஜிங் நகரின் டென்ஜிங் பகுதியில் நடைபெறவுள்ள நீதி சம்பந்தமான பயிற்சி நெறியொன்றில் பங்குபற்றச் செல்லவுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று வார கால பயிற்சி நெறியில் பங்குபற்றுவோருள் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர்களான எல.ஆர்.கமகே, எச்.எம்.சூலனி, டபிள்யூ.டி.தர்மவர்தன ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர சீனாவின் நடைபெறவுள்ள பயிற்சி நெறியில் பங்குபற்றும் மூன்று வார காலத்திற்கு பதில் பொலீஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஐ.அப்துல் நஸார்