Breaking News

பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் தமதாக்கினார்

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் செக் குடியரசின் லூசி சஃபரோவாவை வீழ்த்தி 3ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். மேலும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனைகள் பட்டியலில் 33 வயதான செரீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டெனிஸ் இறுதிப் போட்டி பரீஸின் ரோலண்ட் கேராசில் நடைபெற்றது. இதில் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள செரீனாவும் 13ஆவது இடத்தில் உள்ள செக் குடியரசின் லூசி சஃபரோவாவும் மோதினர். இந்த போட்டி முடிவில், செரீனா வில்லியம்ஸ், 6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் லூசி சஃபரோவாவை வீழ்த்தி பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் தமதாக்கினார்