Breaking News

சீனாவில் நோயாளியொருவரின் சிறுநீரகத்திலிருந்து 420 சிறுநீரகக் கற்கள்

சீனாவில் நோயாளியொருவரின் சிறுநீரகத்திலிருந்து 420 சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.


டோபூ என்ற உணவுப் பதார்த்ததை தனது அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சீன நபரொருவரின் சிறுநீரகத்திலிருந்து 420 சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் கிழக்கு சீனாவின் ஸீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ஹீ என்ற நபர் டொங்யாங் மக்கள் மருத்துவமனையில் தனது வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தபோது சோனைக்குட்படுத்தப்பட்டார். சீ.ரி. ஸ்கேன் சோதனையின்போது அவரது இடதுபக்க சிறு நீரகம் கற்களால் நிறைந்துள்ளமை தெரியவந்தது. அவற்றுள் அதிகமானவை சின்னஞ்சிறு கற்களாகும்.

கடந்த வெள்ளிக் கிழமை வைத்தியர்கள் சத்திர சிகிச்சையினை மேற்கொண்டனர்.

இருபது வருடங்களுக்கு முன்னரும் தனக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டிருந்ததாகவும், அதிர்வலைகள் மூலம் அவை உடைக்கப்பட்டதாகவும் ஹீ தெரிவித்தார்.

நான் முப்பது வருடங்களாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றேன் இவ்வளவு எண்ணிக்கையிலான கற்களை நான் ஒருபோதும் பார்த்ததில்லை என கவனிப்பு சத்திரசிகிச்சை நிபுணர் ஸூஒ சங்சுன் தெரிவித்ததாக கயியான்ஜயாங் ஈவினிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

உள்ளூர் உணவான டோபூவில் காணப்பட்ட ஜிப்சத்தின்  உயர் செறிவுதான் வழக்கத்திற்கு மாறான அதிக எண்ணிக்கையான காற்கள் உருவாகக் காரணமாகும். இந்த டோபூ உணவில் அதிக கல்சியமும் காணப்படுகின்றது. இது போதியளவு தண்ணீர் பருகாவிட்டால் அகற்ற முடியாது.

ஹீ தனது வைத்திய சிகிச்சையை தாமதித்திருந்தால் அவரது சிறுநீரகத்தின் செயற்பாடு நின்றுபோயிருக்கும். அந்த சிறுநீரகத்தை அகற்றவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம் என பிரதம சத்திரசிகிச்சை நிபுணர் வெய் யூபின் தெரிவித்தார்.

வைத்தியர்கள் இடுக்கிகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு கற்களாக அகற்றினர்.
மிகச் சிறிய கற்களை அகற்றுவதற்கு எமக்கு 45 நிமிடங்கள் தேவைப்பட்டன என தெரிவித்த டாக்டர் வெய் 'சத்திர சிகிச்சையின் பின்னர் எனது கைகளும் கால்களும் மரத்துப்போய்விட்டன' எனவும் தெரிவித்தார்.

ஹீ சத்திர சிகிச்சையின் பின்னர் பிளாஸ்ரிக் பையில் அந்தக் கற்களை வீட்டிற்கு கொண்டு சென்றார்.