Breaking News

தனது மகளின் மரணத்துக்கு பத்து லட்சம் ரூபாய் நட்டஈடு

தனது மகளின் மரணத்துக்கு பத்து லட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோரி இலங்கை அகதி ஒருவர், சென்னை உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தின் திருவாரூரிலுள்ள அகதி முகாமில் வசிக்கும் எஸ்.அதிபதி என்பரே இம் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அகதி முகாமில் தங்கியிருந்த 11 வயதான தனது மகள், கடந்த வருடம் மே மாதம் 12 ஆம் திகதி உயிரிழந்தாகவும் இதற்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

முகாமிலுள்ள தங்களது வீட்டின் கூரையில் போடப்பட்டிருந்த அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளினால், தமது மகளின் மரணம் சம்பவித்தது என இலங்கை அகதி குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு, தலா 100 சதுர அடி கொண்ட 400 வீடுகள் மாநில அரசினால் கட்டப்பட்டதாக தெரிவித்த அவர், அடிப்படை வசதிகளின்றி நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/147919#sthash.NPV2xUnZ.dpuf